October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் நாஸ்வில் நகரில் பாரிய வெடிப்பு சம்பவம்

Photo:Nashville Fire Dept Twitter

அமெரிக்காவின் நாஸ்வில் நகரில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்று வெடித்துச்சிதறியுள்ள அதேவேளை,பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிப்பு சம்பவம் திட்டமிடப்பட்டு நடைபெற்றுள்ளது போல தோன்றுகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடிப்புச் சம்பவம் காரணமாக மூவர் காயமடைந்துள்ள அதேவேளை,அவர்களுக்கு கடும் காயங்களில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் ஏடிஅன்ட் டி கட்டிடத்திற்கு தாங்கள் அழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர் ,அங்கு தரித்து நின்ற வாகனத்தை சோதனைசெய்த பின்னர் அபாயகரமான பொருட்கள் பிரிவினை அழைக்கவேண்டும் என தீர்மானித்ததாகவும் இதன் பின்னர் சற்று நேரத்தில் 6.30 மணிக்கு அந்த வாகனம் வெடித்துசிதறியது என தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக ஒன்பது வாகனங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..