கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை தடையின்றி அனைவரும் பெற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்குமாறு உலக தலைவர்களுக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இணையவழி மூலம் ஆற்றிய கிறிதுமஸ் உரையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அரச தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பெறுவதற்கு ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும்.
அனைவருக்கும் தடுப்பூசிகள் குறிப்பாக உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவைப்படுபவர்களுக்கு தடுப்பூசிகள் சென்றடையவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்
இறைவரின் மகன், அரசியல் மற்றும் அரசாங்க தலைவர்கள் மத்தியில் சர்வதேச ஒத்துழைப்பு என்ற உணர்வை மீண்டும் தோற்றுவிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது சுகாதார நலன் குறித்த விடயத்துடன் ஆரம்பமாகட்டும். இதன் மூலம் அனைவருக்கும் கிசிச்சையும் மருத்துவமும் கிடைக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எல்லைகள் அற்ற இந்த சவாலில் நாங்கள் சுவர்களை உருவாக்கமுடியாது நாங்கள் அனைவரும் ஒரே படகிலேயே பயணம் செய்கின்றோம் எனவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
சுகாதார நெருக்கடியின் தாக்கம் முன்னர் எப்போதும் இல்லாததை விட உலக ஐக்கியம் அவசியப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிடடுள்ளார்.
சூழல் நெருக்கடி கொரோனா வைரஸினால் உருவாகியுள்ள மோசமான பொருளாதார சமூக சமநிலைமையின்மை ஆகியவை காணப்படும் வரலாற்றின் இந்த தருணத்தில் ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்வது முக்கியமானது என பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.