January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நைஜீரியாவில் புதியவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

நைஜீரியாவில் புதியவகை கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரசிலிருந்து வித்தியாசமானது என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான ஆபிரிக்க நிலையத்தின் தலைவர் ஜோன் என்காங்கசொங் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் நைஜீரியாவில் கொரோனாவை பரப்புகின்றது என்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா பிரிட்டனுடன் ஒப்பிடும்போது குறைந்தளவு மரபணு சோதனையையே மேற்கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நைஜீரியாவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பும் நைஜீரியாவில் உள்ள தொற்றுநோய் தொடர்பான அமைப்பும் இணைந்து மேலும் மாதிரிகளை ஆராயவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நைஜீரியாவிலும் தென்னாபிரிக்காவிலும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆபிரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் அவர் தெரிவிததுள்ளார்.