file photo: Twitter/ Atlantide
எத்தியோப்பியாவின் மேற்குப் பிராந்தியமான பெனிங்சங்குல் குமுஸ் பகுதியில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
எத்தியோப்பியாவின் புலன் கவுண்டியின் பெக்கோஜி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
பல்லின மக்கள் கலந்து வாழும் பகுதியொன்றிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் எத்தியோப்பிய ஜனாதிபதி அபி அஹ்மட் பெனிங்சங்குல் குமுஸ் பிராந்தியத்துக்கு விஜயம் செய்து, அண்மைக்கால தாக்குதல்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அடுத்த நாளே, இவ்வாறானதொரு படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதல்களை நடத்திய ஆயுதக் குழு தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
எத்தியோப்பியாவில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் காணி மற்றும் வளங்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஆயதப் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.