July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிசோர் சதுக்க படுகொலையாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்

2007 இல் ஈராக்கில் பொதுமக்களை கொலை செய்தவர்களிற்கு அமெரிக்க ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பாதுகாப்பு நிறுவனமான பிளக்வோட்டர்சினை சேர்ந்த நான்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களிற்கே டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

2007 இல் பக்தாத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 14 பொதுமக்களை கொலை செய்தமைக்காக இவர்களிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈராக்கின் தலைநகரில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக இயந்திர துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர்,கைக்குண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர், சினைப்பர் தாக்குதல்களை மேற்கொண்டனர் என இவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிசோர் சதுக்க படுகொலைகள் என அழைக்கப்பட்ட படுகொலைகள் சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன், ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் ஒரு கரும்புள்ளியாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2014 இல் பிளக்வோட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த நால்வருக்கும் எதிராக கொலைகுற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன் பின்னர் தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.

ஈராக்கில் பொதுமக்களை கொலை செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை டிரம்ப் இரத்து செய்து பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை குறித்து கடும் அதிருப்தியும் அதிர்ச்சியும் வெளியாகியுள்ளது.