கரிமா பலோச் என்ற 37வயது பெண் மனித உரிமை செயற்பாட்டாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த கரிமா பலோச் ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் கனடா பொலிஸார் அவர் குறித்த விபரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மரணம் குறித்து தங்களிற்கு எந்த சந்தேகமும் இல்லை என கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது சகோதரியின் மரணம் தனது குடும்பத்திற்கு மாத்திரம் இழப்பில்லை,பலூச் தேசிய அமைப்பிற்கும் இழப்பு என உயிரிழந்த மனித உரிமை செயற்பாட்டாளரின் சகோதரி தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் குறித்த பிரசாரத்திற்காக பலூச்சை 2016 இல் பிபிசி உத்வேகம் அளிக்கும் செல்வாக்குமிக்க 100 பெண்களில் ஒருவராக தெரிவு செய்திருந்தது.
பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை தொடர்ந்து 2015 இல் பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய அவர் பலூச்சிஸ்தான் மக்களின் உரிமைகளிற்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார்.
இதன்காரணமாக அவர் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார்.