file photo: Facebook/ Heathrow Airport
பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்போவதில்லை என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, பல நாடுகளும் அந்த நாட்டுடான விமான சேவையை இடைநிறுத்தியுள்ளன.
இந்நிலையிலேயே அவுஸ்திரேலிய அதிகாரிகள் ‘பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் தொடர்பில் விமானக் கட்டுப்பாடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஹோட்டலில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இறுக்கமாகப் பேணப்படுவதால், விமானக் கட்டுப்பாடுகளுக்கான அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா வைரஸ் அவுஸ்திரேலியாவிலும் பரவுகின்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற நால்வர் இந்த புதிய வகை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பிரிட்டனில் பரவிவரும் புதிய வைரஸ் காரணமாக பிரிட்டனின் அயல்நாடுகள், கனடா, சவூதி அரேபியா உட்பட பல நாடுகள் விமானப் போக்குவரத்தினை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.