அமெரிக்க தேர்தல் முடிவுகளை மார்சல் சட்டத்தினை பயன்படுத்தி இரத்துச்செய்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆராய்ந்தமை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற கடுமையான விவாதங்கள் குறித்து டிரம்பின் அதிகாரிகள் ஊடகங்களிற்கு இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
டொனால்ட் டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளைன் வெள்ளை மாளிகை சந்திப்பில் கலந்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைக்கல் பிளைன் முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மார்சல் சட்டத்தினை பயன்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
தேர்தல் முடிவுகளை மார்சல் சட்டத்தினை பயன்படுத்தி இரத்து செய்வது குறித்து வெள்ளை மாளிகையில் ஆராயப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை என டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் நிராகரித்துள்ளார்.
எனினும் டிரம்ப நிர்வாகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் மார்சல் சட்டத்தினை பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாக சி.என்.என்.னிற்கு தெரிவித்துள்ளனர்.
எனினும் டிரம்ப் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தாரா? என்பது குறித்த விடயங்கள் வெளியாகவில்லை