அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மேலும் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு புதிய சமூக விலகல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நியூ சவுத்வேல்ஸ் மாநிலப் பிரதமர் கிளாடிஸ் பெரெஜீக்லியன் இந்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
சிட்னியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
சிட்னியின் புறநகர் பகுதிகளில் பல உணவகங்கள் தொற்று பரவல் உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 30 நோயாளிகளில் 28 பேர் அவ்லோன் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அவ்லோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் 18 இடங்களில் முன்னெடுக்கப்படுவதாக நியுசவுத்வேல்ஸ் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை விக்டோரியா, தென் அவுஸ்திரேலியா உள்ளிட்ட மாநிலங்கள், சிட்னி பிரஜைகள் தங்கள் பகுதிகளுக்குள் வருவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதேவேளை சிட்னியில் வசிப்பவர்களிற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக நியுசவுத்வேல்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார்.
சிட்னி புளுமவுண்டன்ஸ் சென்டிரல் கோஸ்ட ஆகிய பகுதிகளிற்கான கட்டுப்பாடுகளையே அவர் அறிவித்துள்ளார்.