July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள் மீட்பு

நைஜீரியாவின் வடக்கு,கிழக்கு பகுதியில் கடந்த வாரம் கடத்தப்பட்ட மாணவர்களை படையினர் விடுவித்துள்ள நிலையில், அவர்களில் பலர் தங்கள் வீடுகளிற்கு திரும்பியுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட மாணவர்கள் வெறும்காலுடனும் புழுதிபடிந்த உடைகளுடனும் தங்கள் பகுதிக்கு திரும்பியுள்ளனர்.

சிறுவர்கள் புழுதிபடிந்த ஆடைகளுடன் திகைப்படைந்தவர்களாக, களைத்துப்போனவர்களாக காணப்பட்டனர் என ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தங்களை கடத்தியவர்கள் தாங்கள் பொகொ ஹரம் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர் என பெயர் குறிப்பிடவிரும்பாத மாணவன் ஒருவன் தெரிவித்துள்ளான்.

ஆனால் அவர்கள் உண்மையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை என தான் சந்தேகிப்பதாக அந்த மாணவன் தெரிவித்துள்ளான்.

அவர்கள் காலையும் மாலையிலும் எங்களை தாக்கினார்கள், நாங்கள் மிகுந்த துயரங்களை சந்தித்தோம் என தெரிவித்துள்ள அந்த மாணவன், ஒரு நாளைக்கு ஒரு தரம் மாத்திரம் உணவு தந்தார்கள். இரண்டுவேளை குடிக்க தண்ணீர் தந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் நைஜீரியாவின் கட்சினாவில் உள்ள கங்காரா எனும் இடத்தில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வியாழக்கிழமை நைஜீரிய படையினர் மீட்டுள்ளனர்.