file photo: Facebook/ Emmanuel Macron
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 வயதான பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி இம்மானுவேல் 7 நாட்கள் வரை தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பொறுப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இவ்வாரம் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், பிரான்ஸில் இதுவரை 2 மில்லியன் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 59,400 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.