October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனவரியில் சீனா செல்லும் உலக சுகாதார ஸ்தாபன குழு

கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்த ஆய்வுகளிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழுவொன்று ஜனவரி மாதத்தில் வுகான் செல்லவுள்ளது.

கொரோனா வைரஸின் ஆரம்பம் குறித்த விசாரணைக்காக தனது குழுவொன்று ஜனவரி மாதத்தில் சீனாவின் வுகானிற்கு செல்லவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

ஜனவரியில் இது இடம்பெறும் என்பதை என்னால் உறுதிப்படுத்தமுடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஹெடின் ஹல்டோர்சன் தெரிவித்துள்ளார்.

தொற்று நோயியல் நிபுணர்கள் விலங்கு சுகாதார நிபுணர்கள் அடங்கிய குழுவினரே சீனா செல்லவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் மில்லியன் கணக்கில் உயிர்களை பறித்துள்ளதுடன், உலக பொருளாதாரத்தை சிதைத்துள்ள நிலையில் வுகானில் உருவாகியது என சந்தேகிக்கப்படும் வைரஸ் குறித்த விசாரணைகள் அவசியம் என விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

எனினும் கொரோனா வைரஸ் தனது நகரத்திலிருந்தே உருவானது என தெரிவிக்கப்படுவதை கடந்த ஒரு வருடகாலமாக சீனா நிராகரித்து வந்துள்ளது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் வுகானிலிருந்து உருவாகவில்லை. அது வெறும் பிரசாரம் என சீனாவின் ஊடகங்கள் தெரிவித்தன என ஜேர்மனியின் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

அதற்கான ஆதாரங்களும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

கொரேனா வைரஸ் குறித்த விபரங்களை வேண்டுமென்றே மறைத்தது என்ற குற்றச்சாட்டையும் சீனா நிராகரித்து வருகின்றது.