November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு தயார்; இந்தியாவுக்கு சீனா அழைப்பு

இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா கடுமையாக பின்பற்றுவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு உறுதி பூண்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுனியிங் தெரிவித்துள்ளார்

மேலும் எல்லையில் அமைதி மற்றும் நிலைத் தன்மையை உறுதி செய்யவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் சீனா கடமைப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் பிராந்தியத்தின் உரிமையை பாதுகாக்கவும் சீனா உறுதிபூண்டுள்ளதாகவும் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவைப் பேணுவது ,அடிப்படை நலன்களுக்கும் ,அந்தந்த நாட்டு மக்களுக்கும் நல்லது என அவர் கூறியுள்ளார்

இது போன்ற நல்லுறவு ஏற்பட இரு தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் தேவை என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா,சீனா ஆகிய இருநாடுகளுக்குமிடையே எல்லைப் பகுதியில் தாெடர்ந்து சிக்கல் நிலை நீடித்து வரும் இந்த தருணத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் பேசித் தீர்க்கலாம் என அழைப்பு விடுத்துள்ளது.