சிங்கப்பூரில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரித்து வரும் நிறுவனமொன்று, தடுப்பூசியை 1305 உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளிடம் சோதனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
பயோ தொழில்நுட்ப நிறுவனமான டைச்சன், அதனது மருந்துகளை மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட தடுப்பூசி, நோயாளிகளிடையே கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைத்து, அவர்கள் வேகமாக குணமடைய உதவுவதோடு, தற்காலிக பாதுகாப்பை வழங்கக்கூடியது என்று சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் கட்ட சோதனையின் போது, சோதனைக்காக தன்னார்வ ரீதியில் முன்வந்துள்ள ஆரம்ப கட்ட கொரோனா நோயாளிகளின் குருதிக்கு, நேரடியாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக பயோ தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் மூலம் நோயாளர்களின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படுகின்றதா? என்பது அவதானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் காய்ச்சல் உள்ள நோயாளிகளின் நிலைமை, ‘தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் மேலும் மோசமடையவில்லை என்றால், அந்த மருந்து பலனக்கின்றது’ எனக் கருதப்படுவதாக குறித்த சிங்கப்பூர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தடுப்பூசி பலனனித்தால், அதனை மருந்து ஒழுங்கமைப்பு நிறுவனங்களின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப் போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.