October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா-சீனாவுக்கிடையில் புதிய சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் செய்தியினை அமெரிக்காவிற்கான சீன தூதரகம் பகிர்ந்துகொண்டது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சீன தூதரகம் நிராகரித்துள்ளது.

நேற்று வெளியிட்ட தனது டுவிட்டர் செய்தியில் டிரம்ப் தேர்தல் மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைத்திருந்தார்.
இந்த டுவிட் பிரச்சினைக்குரியது என தெரிவித்திருந்த அதேவேளை அமெரிக்காவிற்கான சீன தூதரகம் இதனை மீள பகிர்ந்துகொண்டுள்ளமையை பல டுவிட்டர் பயனாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டினை நிராகரித்துள்ளதுடன் தனது டுவிட்டர் கணக்கு ஹக் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.

எங்கள் டுவிட்டர் ஹக்செய்யப்பட்டுள்ளது,நாங்கள் இவ்வாறான நடவடிக்கையை கண்டிக்கின்றோம். ஒன்பதாம் திகதி நாங்கள் எதனையும் டுவிட்டரில் மீளபகிர்ந்துகொள்ளவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹொங்கொங்கில் சீன அதிகாரிகளின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதை சீனா கடுமையாக சாடியுள்ள சூழ்நிலையிலேயே இந்த டுவிட்டர் சர்ச்சை உருவாகியுள்ளது.

கடந்த செப்டம்பரில் இதேபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தது.பிரித்தானியாவிற்கான சீன தூதுவர் டுவிட்டரில் ஆபாசப்படமொன்றிற்கு விருப்பம் வெளியிட்டிருந்தார். எனினும் இது ஹக்கர்களின் நடவடிக்கை என தெரிவித்திருந்த சீன தூதரகம் விசாரணைகளிற்கு உத்தரவிட்டிருந்தது.