பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டரிலிருந்து தனது முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் உட்பட அனைவரையும் நீக்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் பிரதமர் தனது டுவிட்டரிலிருந்து அனைவரையும் நீக்கியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
தனது முதல் மனைவி ஜெமீமா கோல்ட்ஸ்மித்தையும் இம்ரான்கான் தனது டுவிட்டரிலிருந்து நீக்கியுள்ளார்.
2010 இல் தனது டுவிட்டர் கணக்கினை ஆரம்பித்த இம்ரான்கான் தான் தொடர்பவர்கள் வரிசையில் தனது முதல் மனைவியை இணைத்திருந்தார்.
இதேவேளை இம்ரான்கான் தனது டுவிட்டரிலிருந்து அனைவரையும் நீக்கியது குறித்து அதிகம் கருத்து வெளியிடாத பயனாளர்கள் அவர் தனது முதல் மனைவியை நீக்கியமை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இம்ரான்கான் ஜெமீமாவை டுவிட்டரிலிருந்து நீக்கியுள்ளீர்களா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீவ் தனது டுவிட்டரில் எவரையும் இணைத்துக்கொள்ளவில்லை. அதனை பார்த்த இம்ரான்கான் அவரை பின்பற்ற நினைத்திருக்கலாம் என ஒருவர் தெரிவித்துள்ளார்.