பைசர் பயோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ் மருந்து 95 வீதம் பயனளிக்கக்கூடியது என அமெரிக்காவின் மருந்து ஒழுங்குபடுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் மருந்து குறித்து எந்த பாதுகாப்பு கரிசனையும் இல்லை என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு நிர்வாகம் இன்னமும் இந்த மருந்திற்கு அங்கீகாரத்தை வழங்காதபோதிலும் மருந்தினை சோதனைக்கு உட்படுத்தியமை குறித்த தரவுகள் அதன் அவசரகால பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுடன் ஒத்துப்போகின்றது என தெரிவித்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் மருந்தினை பயன்படுத்தியவர்கள் சிறிய பக்கவிளைவுகளை தவிர வேறு எந்த பாதிப்புகளையும் எதிர்கொள்ளவில்லை என அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.