October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா வைரஸ் மருந்தினை ஈரான் பெறும் முயற்சிக்கு அமெரிக்கா தடை’

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் மூலம் ஈரான் கொரோனா வைரஸ் மருந்தினை பெறும் முயற்சிகளிற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது என ஈரானின் மத்திய வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானிற்கு எதிராக விதித்துள்ள தடைகளால் உருவாகியுள்ள பணப்பரிமாற்ற சிக்கல்கள் கொரோனா வைரஸ் மருந்தினை ஈரான் பெறுவது கடினமான விடயமாக்கியுள்ளது என ஈரானின் மத்திய வங்கியின் தலைவர் அப்டொல்நசர் ஹெமட்டி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற தடைகளால் மருந்தினை பெறுவதற்கான பணத்தை செலுத்துவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான ஈரான் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் சர்வதேச திட்டத்தின் மூலம் கொரோனா வைரஸ் மருந்தினை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.