பாகிஸ்தானின் பெஸாவர் நகரில் கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையொன்றில் ஒக்சிசன் முடிவடைந்ததன் காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
உரியநேரத்தில் ஒக்சிசன் கிடைக்காததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மருத்துவமனைக்கு ஒக்சிசன் வழங்குபவர் உரிய நேரத்தில் அதனை விநியோகிக்க தவறியதன் காரணமாக ஏழு கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்தனர் என பெசாவரின் ஹைபர் போதனா வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நகரின் இரண்டாவது பெரிய மருத்துவமனைக்கு 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ராவல்பிண்டி நகரிலிருந்தே ஒக்சிசன் விநியோகிக்கப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள மாகாண சுகாதார அமைச்சர் தைமூர் ஜக்ரா உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு 48 மணித்தியாலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அனைத்து விபரங்களையும் பொதுமக்களிற்கு பகிரங்கப்படுத்தபோவதாக அவர் உறுதியளித்துள்ளார்.