துருக்கி நாட்டின் காசிபாசா நகரில் இருந்து தென்மேற்கே 49 கி.மீட்டர் தொலைவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 82.05 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இந்த நிலநடுக்கத்தில் குடியிருப்பாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.