அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் நிர்வாக குழுவில் இடம்பெறவுள்ளவர்கள் பென்டகனின் புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்திப்பதை டிரம்ப் நிர்வாகம் தடுத்துள்ளது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பைடனின் குழுவை சேர்ந்தவர்கள் அனுமதியில்லாமல் புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்களை தொடர்புகொள்ள முடியாது என டிரம்ப நிர்வாகம் அறிவித்துள்ளது.
பைடனின் குழுவினர் தாங்கள் சந்திக்கவிரும்புகின்றனர் என்பது குறித்தும் என்னகேள்விகளை கேட்கவுள்ளனர் என்பது குறித்தும் முன்கூட்டியே விபரங்களை வெளியிடவேண்டும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜோ பைடனின் குழுவினரின் இந்த வேண்டுகோள்களை பாதுகாப்பு திணைக்களத்தி;ன் சிரேஸ்ட அதிகாரியும் டிரம்பின் விசுவாசியுமான ஆராய்ந்து முடிவெடுப்பார் எனவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டினை பாதுகாப்பு திணைக்கள அதிகாரியொருவர் நிராகரித்துள்ளார்.
ஜோ பைடனின் குழுவினர் பென்டகனின் புலனாய்வு அதிகாரிகளை சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என பாதுகாப்பு திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.