அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகராக செயற்படுவதற்கு அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களிற்கான தேசிய நிறுவகத்தின் இயக்குநரும் டிரம்பின் கொரோனா வைரஸ் செயலணியில் இடம்பெற்றிருந்தவருமான அன்டொனி பவுசி இணங்கியுள்ளார்.
என்.பி.சி.க்கு கருத்து தெரிவிக்கையில் பவுசி இதனை உறுதி செய்துள்ளார்.
தலைமை மருத்துவ ஆலோசகராக செயற்படுவதற்கு ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்ததும் தான் அந்த இடத்திலேயே அதனை ஏற்றுக்கொண்டதாக பவுசி தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களிற்கு அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளதை சிறந்த நடவடிக்கை என அன்டனி பவுசி வரவேற்றுள்ளார்.
நான் அவருடன் பேசினேன். அவருடன் 100 நாள் முகக்கவசம் குறித்து பேசினேன். அது சிறந்த திட்டம் என பவுசி குறிப்பிட்டுள்ளார்.
அன்டனி பவுசி டிரம்பின் நிர்வாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிற்கு தலைமை வகித்தவர் என்பதுடன் டிரம்புடன் கொள்கை ரீதியில் கடுமையாக முரண்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.