
கொரோனா வைரஸ் மருந்தினை விநியோகிக்கும் வலையமைப்புகளை சர்வதேச ஹக்கர்கள் இலக்குவைத்துள்ளனர் என ஐ.பி.எம் தெரிவித்துள்ளது.
செப்டம்பரிலேயே இந்த ஹக்கிங் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன.
அரசாங்க ஸ்தாபனங்கள் சக்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரை இந்த கணிணி ஊடுருவல்காரர்கள் இலக்கு வைத்தனர் என ஐ.பி.எம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மருந்துகளை சேமிப்பதற்கு அவசியமான கோல்ட்செயின் வலையமைப்பினையே ஹக்கர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுளள பைசர்-பயோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ் மருந்தினை சேமிப்பதற்கு இந்த கோல்ட்செயின் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னஞ்சல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிசிங் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளனவா என்பது தெரியவராத அதேவேளை, இந்த ஹக்கிங் நடவடிக்கைகளை நாடொன்றே முன்னெடுக்கின்றது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என ஐ.பி.எம் தெரிவித்துள்ளது.