கொரோனா வைரஸ் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மொடேர்னா நிறுவனம் அமெரிக்க , ஐரோப்பிய மருந்து ஒழுங்குபடுத்தும் அமைப்புகளிடம் தனது மருந்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை கோரி விண்ணப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது தனது பரிசோதனை மருந்து 94.1 வீதம் பயனளிக்ககூடியது என்பது உறுதியாகியுள்ளதாக மொடேர்னா தெரிவித்துள்ளது.
தயாரிக்கப்பட்டுவரும் மருந்தினால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.அனைத்து வயதினருக்கும்,ஒரே மாதிரியான முடிவுகளே வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள மொடேர்னா நிறுவனம், கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை குணப்படுத்துவதில் 100 வீத வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எங்களிடம் மிகவும் செயல்திறன்மிக்க மருந்துள்ளது என நாங்கள் கருதுகின்றோம். அதனை நிரூபிப்பதற்கான தரவுகள் எங்களிடம் தற்போது உள்ளன என மொடேர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி டல் ஜக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா வைரஸ் நிலவரத்தை மாற்றியமைப்பதில் எங்களின் மருந்து முக்கிய பங்கு வகிக்கும் என கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.