
ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கு பொறுப்பான விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உலக நாடுகளில் உள்ள தனது தூதரங்களின் பாதுகாப்பை இஸ்ரேல் அதிகரித்துள்ளது.
ஈரான் தனது விஞ்ஞானியின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக இஸ்ரேல் தனது தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகொலையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது இன்னமும் மர்மமாக உள்ள நிலையில், அதிகாரிகளும் பாதுகாப்பு நிபுணர்களும் இஸ்ரேலே காரணமாயிருக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு இஸ்ரேல் தனது தூதரகங்களின் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு தனது அனைத்து தூதரகங்களினதும் எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளது என இஸ்ரேல் ஊடகம் தெரிவித்துள்ளது.