February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விஞ்ஞானி பக்ரிசாதேவின் கொலைக்கு பதிலடி கொடுப்போம்’; இரான் எச்சரிக்கை

மூத்த அணு விஞ்ஞானி மோஹ்சின் பக்ரிசாதேவின் கொலைக்குக் காரணமானவர்களைப் பழிதீர்க்கவுள்ளதாக இரான் எச்சரித்துள்ளது.

கொலைகாரர்கள் மீது இடியைப் போன்று தாக்கப்போவதாக இரான் ஆன்மீகத் தலைவரின் ஆலோசகர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமது சகாவான ட்ரம்பின் அரசியல் வாழ்க்கையின் இறுதி நாட்களில் இரான் மீது கடும் அழுத்தங்களை கொடுத்து, முழுமையான யுத்தமொன்றுக்கு சியோனிஸ்டுகள் முயற்சிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் இந்த பயங்கரவாத நடவடிக்கையினை கண்டிக்க வேண்டும் என்று இரானின் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த படுகொலையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘இரானின் தலைசிறந்த விஞ்ஞானியை பயங்கரவாதிகள் இன்று படுகொலை செய்துள்ளனர்’ என வெளிவிவகார அமைச்சர் ஜவாட் சரிப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘இந்த படுகொலை மூலம் சர்வதேச சட்டம் தெளிவாக மீறப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ள இரானின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதி, பிராந்தியத்தில் பேரழிவை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.