சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இரு தரப்பும் மோதலில்லாத, மோதாத உணர்வுகளை பின்பற்றும் எனவும் பரஸ்பர மரியாதை பரஸ்பரம் இரு தரப்பிற்கும் வெற்றியளிக்கும் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும்,கருத்துவேறுபாடுகளை உரிய விதத்தில் கையாளும்,உணர்வுகளை பின்பற்றும் என சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு தரப்பும் சீன -அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான ஸ்திரமான உறவுகளை முன்னெடுக்கும் சமாதானம், அபிவிருத்தி என்ற மேன்மையான நோக்கங்களை ஊக்குவிப்பதற்கு ஏனைய நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து செயற்படும் எனவும் சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் மூலம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை வாழ்த்தியவர்களின் பட்டியலில் சீன ஜனாதிபதியும் இணைந்துகொண்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி உட்பட ஒரு சில தலைவர்களே பைடனிற்கு இன்னமும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.