அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ரொபேர்ட் ஒ பிரையன் பிலிப்பைன்ஸ் தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்ட மறுநாள் பிலிப்பைன்ஸிற்கான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தின் போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சீனாவுடன் எல்லை தகராறில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
சீனாவுடன் எல்லை தகராறில் சிக்குண்டுள்ள நாடுகளான பிலிப்பைன்ஸ் மனிலாவிற்கு தனது ஆதரவை வெளியிட்டிருந்த பிரையன் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.அதேபோல்,தாய்வானிற்கும் அவர் தனது ஆதரவை வெளியிட்டிருந்தார்.
சீனா தனது நலன்களை முன்னெடுப்பதற்காக இராணுவ ரீதியிலான அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகரின் கருத்து நியாயமற்றது என தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸிற்கான சீன தூதரகம், அவரின் கருத்து பிராந்தியத்தில் காணப்படும் பதற்றநிலையை அதிகரித்துள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளது.
பனிப்போர் காலத்தையை மனோநிலையை அடிப்படையாக கொண்ட மோதலை தூண்டக்கூடிய இந்த கருத்துக்களை நாங்கள் கடுமையான எதிர்க்கின்றோம்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் விஜயம் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதல்ல மாறாக அமெரிக்காவின் சுயநலத்திற்காக பிராந்தியத்தில் மோதலை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.