January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கத் தேர்தல்: ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைக்க டொனால்ட் ட்ரம்ப் சம்மதம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு வழிவகுக்கும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளை அதிகாரபூர்வமாக முன்னெடுக்க முடியும் என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு எதிரான தனது வழக்குகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரச நிர்வாக சேவைக்குப் பொறுப்பான ஜிஎஸ்ஏ (GSA) அமைப்பு, பைடனை “வெற்றியாளராக” முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னதாக, மிச்சிகன் மாநிலத்தில் பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு ட்ரம்புக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகின்றது.

ஆட்சி மாற்றத்திற்குத் தேவையான அதிகாரபூர்வ நடவடிக்ககளை தொடங்குமாறு பைடன் குழுவிடம் ஜிஎஸ்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக, ஆட்சிமாற்றப் பணிகளுக்காக 6.3 மில்லியன் டொலர் நிதி பைடன் அணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜி௭ஸ்ஏ-வின் தலைமை எமிலி மர்ஃபி தெரிவித்தார்.

ஜோ பைடனுக்கு ஆட்சிமாற்றக் காலத்தில் கிடைக்க வேண்டிய நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.