February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இஸ்ரேல் பிரதமர் சவூதிக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை’

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சவூதி அரேபியாவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டார் என வெளியான செய்தியை சவூதி அரேபியா நிராகரித்துள்ளது.

அவ்வாறான சந்திப்பு எதுவும் நிகழவில்லை என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் அல் சவுட் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-சவூதி அரேபிய அதிகாரிகளிற்கு இடையிலான சந்திப்பே இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டதாக வெளியான செய்திகள் சர்வதேச அரசியலில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.