
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மீது இன்று இடம்பெற்ற 23 ரொக்கட் தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கான் தலைநகர் காபூலில் இராஜதந்திர அலுவலகங்கள் காணப்படும் பகுதியை நோக்கி இந்த ரொக்கட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சிறிய வாகனமொன்றில் ரொக்கட்டினை பொருத்தி பயங்கரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சக பேச்சாளர், அந்த வாகனம் படையினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எவ்வாறு நகரிற்குள் நுழைந்தது என்பது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் காரணமாக 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 31 பேர் காயமடைந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிற்கான நிதி வழங்கும் சமூகத்தின் உச்சிமாநாடு சுவிட்சர்லாந்தில் இரண்டு நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல இடம்பெற்றுள்ளது.