அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகனான டொனால் ட்ரம்ப் ஜூனியருக்கு (42) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் காணப்படவில்லை எனவும், மருத்துவர்களின் அறிவுரைகளை முழுமையாகக் கடைபிடித்து வருகிறார் எனவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் அவர்களது மகன் பாரோன் (14) ஆகியோருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் சில நாட்கள் இராணுவ மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று குணமடைந்தனர்.
நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தலில் ட்ரம்ப்பிற்காக, மூத்த மகன் ட்ரம்ப் ஜூனியர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ட்ரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடி கியுலியனியின் மகன் ஆண்ட்ரூ கியுலியானியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.