November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா வரலாற்றிலேயே மிகவும் பொறுப்பற்ற ஜனாதிபதி ட்ரம்ப் – பைடன்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய செயற்பாடுகள் காரணமாக அவர் அமெரிக்கா வரலாற்றிலேயே மிகவும் பொறுப்பற்ற ஜனாதிபதியாக பதிவாகப்போகின்றார் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.

மிச்சிகன் மாகாணத்தில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகும் முடிவுகளை மாற்றும் முயற்சியில் ட்ரம்ப் ஈடுபடுவது பற்றி நிருபரொருவரின் கேள்விக்கு பதலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு பதலளித்த பைடன், தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மறுப்பது அதிகார மாற்றத்தை தடுக்குமா என்பது குறித்து நான் கரிசனை கொண்டிருக்கவில்லை.

ஆனால் ஒரு நாடாக நாங்கள் யார் என்பது குறித்த தவறான செய்தியை உலகுக்கு தெரிவிக்கும் என பைடன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு எதிரான ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. தற்போது அமெரிக்கர்கள் நம்பமுடியாத பொறுப்பற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் முயற்சிக்கும் அவரது செயற்பாடுகள், விதிமுறைக்குட்பட்டதல்ல. ஆனால் இறுதியில் யார் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள் என்பது தான் சுவாரஸ்யமாக இருக்கும்.

மேலும் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஜனவரி 20 ஆம் திகதி நாங்கள் பதிவியேற்க போகின்றோம் என்றார்.

எனவே ட்ரம்பின் இந்த நடவடிக்கை மூர்க்கத்தனமானது. அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவே எமக்கு கடினமாக இருக்கிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தில் பல முக்கிய அமைப்புகளுடன் நாங்கள் தொடர்புகொள்வதற்கு அனுமதி மறுப்பதால் கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான திட்டங்களை தீட்டும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறுதியாக அவரின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை ஆனால் அவர்அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு நம்பகத்தன்மையற்ற மனிதர் என்றும் பைடன் தெரிவித்தார்.