File Photo
நல்லிணக்கம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த உபகுழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்களாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா, விஜயதாஸ ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், வடக்குக் கிழக்கில் போரின் பின்னர் மீள்குடியமர்த்தல், காணி மற்றும் காணாமல் போன ஆட்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் யோசனைகளை முன்வைப்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.