ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி கொடியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து குறித்த நபர் ஜனாதிபதி கொடியை திருடியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
54 வயதுடைய குறித்த சந்தேகநபர் அந்தக் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.