ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தான் தொலைபேசியில் உரையாடியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு கடனுதவி வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் ஜனாதிபதி கோட்டாபய கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கடந்த கால சவால்களை முறியடிக்க ரஷ்யா வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் ஏரோஃப்ளோட் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தாகவும் ஜனாதிபதி கோட்டாபய தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.