முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ள மேர்வின் சில்வா, சுதந்திரக் கட்சி உறுப்புரிமை அட்டையை பெற்றுக்கொண்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த மேர்வின் சில்வா, அந்தக் காலப்பகுதியில் சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பதவி வகித்தார்.
பின்னர், ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்பட்ட அவர், சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சியொன்றை அமைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
இவ்வாறான நிலைமையில் அவர் தற்போது மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.