இலங்கையில் மேல், மத்திய, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் தாழ்நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.
இதனால் களனி, நில்வலா, ஹிங் மற்றும் களுகங்கை உள்ளிட்ட பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் அந்த ஆறுகளை அண்மித்து தாழ்நில பிரதேசங்களில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்கக் கூடிய வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.