January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறைச்சி, மீன், முட்டை விலைகள் உயர்வடைந்தன!

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளாந்தம் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இறைச்சி, மீன், முட்டை விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமை கடைகளில் ஒருகிலோ கோழி இறைச்சி 1000 ரூபா முதல் 1100 ரூபா வரையிலான விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் இதன் விலை 750 ரூபா முதல் 850 ரூபா வரையிலான விலைக்கே விற்பனை செய்யப்பட்டன.

இதேவேளை எரிபொருள் பற்றாக்குறையால் கடலுக்கு செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் மீன் உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதனால் மீன் சந்தைகளில் மீன் விலைகள் பெருமளவுக்கு அதிகரித்துள்ளன.

அதேபோன்று கோழி முட்டை விலையும் அதிகரித்துள்ளன. கடந்த வாரங்களில் 25 ரூபா முதல் 30 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை ஒன்று தற்போது 35 முதல் 50 ரூபா வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் இவற்றின் விலைகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.