பாராளுமன்றத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.
நேற்று நுகெகொடவில் இருந்து பேரணியாக வந்த மாணவர்களை பாராளுமன்ற சுற்றுவட்ட சந்திக்கு அருகில் மறித்த பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்தி விரட்டியடித்தனர்.
எனினும் மீண்டும் அந்தப் பகுதியில் கூடிய மாணவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாணவர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை தகர்க்க முயன்ற போது அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஆனால் மாணவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ளனர்.