தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சிவநேசதுரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் பக்கம் தாவிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான முஷாரப் எம்.பியும் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன் வியாழேந்திரன் எம்.பி, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ஏற்கனவே நேற்றைய தினம் 22 பேருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.