
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்தப்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மலையகப் பல்கலைக்கழகம், தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம், உதவி ஆசிரியர் நியமனம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்று ஜீவன் தொண்டமான் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.