இலங்கையில் நேற்று இரவு முதல் முடக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
இன்று பிற்பகல் 3.30 மணி முதல் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், நள்ளிரவு முதல் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மற்றும் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்தத் தடையை நீக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று மாலை முதல் அவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.