பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் ஏனைய அமைச்சுக்களில் உள்ள ஏனைய அதிகாரிகளை வீட்டிலிருந்தே தமது கடமைகளை செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
தற்போத நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமையில் எரிபொருளை சேமிப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
“எங்கள் நாடு முன்னோடியில்லாத சவாலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், எரிபொருளை சேமிப்பதன் ஒரு படியாக வீட்டில் இருந்தபடியே தங்கள் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் எனது அமைச்சக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்” என்று பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு அரசாங்கமாக, இந்த நெருக்கடியின் விளைவாக மக்களின் நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இந்த சவால்களை கடக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.