January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரீச்சம் பழம் மீதான வரி குறைப்பு

இலங்கையில் பேரீச்சம் பழம் மீதான விசேட இறக்குமதி வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி பேரீச்சம் பழம் மீதான விசேட இறக்குமதி வரி 200 ரூபாவில் இருந்து ஒரு ரூபா வரையில் 199 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் நோன்பு ஆரம்பமாகவுள்ள காரணத்தினாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த நிதி அமைச்சு ஆப்பிள், தோடம், பேரீச்சம் பழங்கள் மீது விசேட இறக்குமதி வரியை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதில் பேரீச்சம் பழத்திற்கான வரிசை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.