May 13, 2025 1:43:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்றார்!

2022 ஆம் ஆண்டின்  ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்திற்காக வில் ஸ்மித் வென்றுள்ளார்.

94 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வில் ஸ்மித் பெற்றதுடன், சிறந்த நடிகையாக ‘தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே’- திரைப்படத்திற்காக ஜெசிகா சாஸ்டெய்ன் பெற்றார்.

இதேவேளை டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான “டியூன்” திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருது என்காண்டோ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

ஜப்பானிய திரைப்படமான “டிரைவ் மை கார்” சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது.