சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபம் தீர்மானித்துள்ளது.
சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய் கிடைக்காமையினால் மார்ச் 20 ஆம் திகதி முதல் இதனை மூடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போதுமான மசகு எண்ணெய் கிடைக்கும் போது அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு மாத காலத்திற்கு சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.