January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும்”: சாணக்கியன்

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

”மக்கள் விடுத்த அழைப்பினை ஏற்றே நான் ஜனாதிபதியாக அரசியலுக்கு வந்தேன்” என்று ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக காலியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.

தெற்கிலே இந்த மக்கள் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஜனாதிபதி மக்களுடைய கோரிக்கைக்கு இணங்கவே அரசியலுக்கு வந்தார் என்று சொன்னால், இன்று மக்களுடைய கோரிக்கைக்கு இணங்கி அவர் பதவி துறந்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சாணக்கியன் தெரிவித்துள்ளார்.