October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச இலங்கை அரசாங்கம் முடிவு!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் அமைச்சர்களிடையே இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எதிர்க்கட்சிகள் கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்த போது, அதனை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வந்தது.

எனினும் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பசுபிக் வலய பணிப்பாளர் இலங்கை வந்துள்ள நிலையயில், அந்த நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி அரசாங்கத்திற்குள் அமைச்சர்களிடையே கொள்கை ரீதியிலான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு அடுத்த மாதமளவில் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.