இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக மூன்று இலட்சம் பேரை இந்த வருடத்தில் அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இவர்களில் அதிகமானோரை கட்டாருக்கு அனுப்பி வைக்கும் வழிவகைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்துள்ளது.
இதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரட்ன, டீ.வி.சானக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜென்ரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோர் கட்டாருக்கு சென்று, அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் கட்டாரின் சர்வதேச தொடர்புகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் அப்துல் அஸிஸ் அன்சாரியை சந்தித்து இலங்கையர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.